Time: 6:48 AM

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கமும் காதிர்முகைதீன் கல்லூரியும் இணைந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான  மாபெரும் பேச்சுப்போட்டி

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கமும்

காதிர்முகைதீன் கல்லூரியும் இணைந்து

பாரதரத்னா ஏ.பி.ஜேஅப்துல்கலாம் அவர்களின் நினைவாக காதிர்முகைதீன் கல்லூரி கலையரங்கில்

பல்கலைக்கழக அளவிலான

அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான

மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இதில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் ஜனாப் எஸ்.ஜே.அபுல்ஹசன் அவர்கள் துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் ஜனாப் ஏ.முகம்மதுமுகைதீன்  அவர்கள் முன்னிலை வகித்தார் பேரா.மேஜர் கணபதி பேரா.கலீல்ரெஹ்மான் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பேரா.செய்யது அகமது கபீர் அவர்கள் போட்டி விதிமுறைகளை விளக்கினார்

இப்போட்டியில் முதல் பரிசை கும்பகோணம் அன்னை கல்லூரியை சார்ந்த நாகமுத்து பாண்டியன்

இரண்டாவது பரிசை தஞ்சை புஷ்பம்கல்லூரியை சார்ந்த கிருஷ்ணன் மூன்றாவது பரிசை திருச்சி அரசு கலைக்கல்லூரி மாணவி பிருந்தா வென்றனர்

முதல்பரிசு  வென்ற கல்லூரிக்கு சுழற்கோப்பையும் அறிய புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரா.ஜெய்னபா பேகம் அவர்கள் தொகுப்புரை வழங்கினார் .

முன்னதாக லயன்ஸ் சங்கபொருப்பாளர்கள் அப்துல்ரஹ்மான் ஆறுமுகசாமி முருகானந்தம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

இறுதியில் பொருளாளர் அப்துல் ஜலீல் அவர்கள் நன்றி கூறினார்.