Time: 10:32 AM

சீனாவில் பாம்பு கடித்ததால், அதனை கையோடு தூக்கிகொண்டு பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம்

பிஜீங்,
சீனாவின்  ஸிஜியாங் மாகாணத்தில் புஜிங் கவுண்டியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 1.5 மீட்டர் நீளமுள்ள பாம்பை, தனது மணிக்கட்டில் சுற்றியப்படி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் ஊழியர்கள் சிறிது நேரம் அச்சத்தில் உறைந்து போயினர். அதிக விஷம் கொண்ட பாம்பு இல்லை என்றாலும் பார்வைக்கு அது மிகவும் அச்சமூட்டும் வகையில் காணப்பட்டது.
அமைதியாக மருத்துவமனைக்கு வந்த பெண், பொறுமையாக சிகிச்சை பெற்றுக்கொண்டார். அவருக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் மணிக்கட்டில் பாம்பு சுற்றி இருப்பது போன்ற புகைப்படங்கள் , சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.