Time: 8:08 AM

பட்டுக்கோட்டையில் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வெ.ராசேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அண்ணாதுரை, ராமநாதன்,  மணி,  அன்னபூரணி,  மதியழகன்,  அருள் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக,   பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவில் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நீதிமன்ற தீர்ப்பாணை,  அரசாணை ஆகியவற்றின் அடிப்படையில்  பகுதிநேர ஆசிரியர் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கிடவும்,  நீதிமன்ற தீர்ப்பாணைப்படி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.5,400 வழங்கவும் பொது அரசாணை வெளியிட வேண்டும்.

அனைத்துத் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.  பெற்றோர்-ஆசிரியர் கழக ஊதியத்தில் பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்  கிடைக்க ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அருகில் ஜூலை 22ஆம் தேதி காலி தட்டு ஏந்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.