Time: 7:23 PM

மும்பையில் விரைவில் ‘சைக்கிள் ஆம்புலன்ஸ்’

மும்பை:

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், கடந்த ஆண்டு, மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. தற்போது, இந்த சேவையில், 20 மோட்டார் சைக்கிள்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.தாராவி போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட, 11 இடங்களில், மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை மையம் இயங்குகிறது.இந்நிலையில், மும்பையில், முதியோருக்கு உதவும் வகையில், ‘சைக்கிள்’ ஆம்புலன்ஸ் சேவையை துவங்க, மாநில சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.அதன்படி, முதியோருக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளுடன், அவர்களது வீடுகளுக்கு சைக்கிளில் செல்லும், மருத்துவ உதவியாளர்கள், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பர்.