Time: 6:49 PM

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை

திருநெல்வேலி:ஜூன் 22,

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லையில் 4ம் வகுப்பு மாணவி தண்ணீருக்குள் யோகாசனம் செய்து 8 உலக சாதனைகளை நிகழ்த்தினார்.

திருநெல்வேலி, வண்ணார்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா 8.நெல்லையில் உள்ள புஷ்பலதா பிரிட்டீஷ் சர்வதேச பள்ளியில் 4ம் வகுப்பு பயில்கிறார். ஒரு வயதில் இருந்தே யோகாசனம் மேற்கொண்டுவருகிறார்.

இவர் மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் புரிந்துள்ளார். ஜனவரியில் மலேசியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.தரையில் யோகாசனம் மேற்கொள்வதற்கு பதிலாக, கடினமான யோகாசனங்களை தண்ணீருக்குள்ளும் செய்து வருகிறார்.

நேற்று சர்வதேச யோகா தினத்தில் நெல்லை, அரசு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் 8 உலக சாதனைகளை செய்தார்.நீருக்குள் வாமதேவ ஆசனம் செய்தபடி பின்னோக்கி நீந்துவது, ஏகபாத வாமதேவ ஆசனத்தை நீருக்குள் முன்னோக்கி நீந்துவது,குப்த பத்மாசனம் என ஆசனங்களை நீருக்குள் செய்து 8 உலக சாதனைகளை படைத்தார்.

அவரை பாராட்டி ”வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்” என்ற அமைப்பின் நிர்வாகிகள் கலைவாணி, பானு ஆகியோர் நடுவர்களாக இருந்து கண்காணித்தனர்.சாதனை புரிந்த மாணவிக்கு நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பாராட்டி பரிசு வழங்கினார்.