Time: 3:30 PM

ஜூன் 2ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின்

ஜூன் 2ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

திமுக சார்பில் போட்டி சட்டப்பேரவை கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு..ஸ்டாலின்,
ஜூன் 2ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் அரசாரணை நிறைவேற்றினால்தான் முழுமை பெறும் என்றார்.