Time: 6:41 AM

மழையால் குற்றாலத்தில் குளுகுளு சீசன்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை துவங்கியது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளுமையான சீசன் துவங்கிவிட்டது.ஆண்டுதோறும் ஜூன் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே துவங்கிவிட்டது. நெல்லை மாவட்டம்தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. குற்றாலத்தில் திடீரென பெய்த மழையினால் அருவிகளில் தண்ணீர் விழத்துவங்கி உள்ளது.மணிமுத்தாறு மலைப்பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையினால் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.