Time: 7:44 PM

அதிராம்பட்டினத்தில் வாலிபர் கொலை தொடர்பாக 4 பேர் கைது

அதிராம்பட்டினம், ஏப்ரல் 05

அதிராம்பட்டினம் அருகில் உள்ள நடுவிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 41. விவசாயி. இவர் கடந்த 3 ந் தேதி இரவு 9 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை ஒட்டி அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்த நிலையில் அகிலன், சுபாஷ், பிரசன்னா, விக்னேஷ் ஆகிய 4 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 4 பேரைத் தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை ஒட்டி மேலும் அசம்பாவிதம் ஏற்படாத அளவுக்கு புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.