Time: 11:54 AM

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 10ம்; வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகளுடன் 10ம்; வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.02.2018 நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் நலன் கருதி, பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மாணவர் விடுதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாணவர் விடுதி தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் காப்பாளர் மற்றும் காப்பாளினிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்பதை காப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்.   காப்பாளர்கள் தங்களுக்கு தெரிந்த பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து கற்றுக் கொடுக்க வேண்டும். விடுதியில் மாணவர்களுடன் அன்பாக பேசி படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான வசதிகளை காப்பாளர் செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். படிக்கும் பருவத்தில் படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.  இந்த ஆண்டு நடைபெறவுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவதற்கு காப்பாளர்கள், காப்பாளினிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.சாந்தி, பயிற்சி துணை ஆட்சியர் திருமதி.ஸ்ரீதேவி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சுபாஷினி மற்றும் காப்பாளர் மற்றும் காப்பாளினிகள் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.