Time: 8:26 AM

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக, தோழமைக் கட்சிகள் இன்றுஆர்ப்பாட்டம்

சென்னை: பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் சட்டப் பேரவையை கூட்டி விவா திக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டா லின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பஸ் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட ங்கள் நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த போராட்டத்திற்கு காங்கி ரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் மற்றும் தோழமைக் கட்சி கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி நாளை (27ம் தேதி) நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின் றன. 63 மாவட்டங்களிலும் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக முன்னணியினர் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இதற்குப் பிறகும் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் வருகிற 29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவி த்து உள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை கலை 10 மணிக்கு சேப்பாக்கத்தில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். சென்னை ெதற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மா.சுப்பி ரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாதவரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

Comments are closed.