Time: 12:45 PM

பட்டுக்கோட்டை அருகே எமதர்மராஜன் கோயில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள எமதர்மராஜன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜனுக்கு தனிக் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

சிறப்புமிக்க இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் ரூ.3 கோடி மதிப்பில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பணி கள் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. அன்று யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. நேற்று காலை 4-ம் கால யாக பூஜைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடம் புறப்பாடும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இக்கோயிலின் கருவறையில் 6 அடி நீள எருமை வாகனத்தில், 7.25 அடி உயரத்தில் எமதர்மராஜன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 9 பரிவார தெய்வங்களின் சிலைகள் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

Comments are closed.