Time: 2:39 PM

அதிராம்பட்டினம் ரோட்டில் குழாய் உடைந்து வீணாகும் குடி நீர்

அதிராம்பட்டினம், ஜன. 5

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையான வண்டிப்பேட்டை சாலையில்  குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடிகிறது. இதனால் நேற்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், அகிய பகுதிகலிருந்து வரும் வாகனங்கள் அதிராம்பட்டினம் ரோட்டில் சிக்கித் தவித்தன. இந்நிலையில் சமூக ஆர்வாலர் அதிரை தௌலத் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ரோட்டில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வாகன டயர்கள், மற்றும் கயறுகள் கட்டி வைத்தனர். இதனையடுத்து இந்த பள்ளத்தால் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் குடிநீர் பைப்பை சரிசெய்துவிட்டு பள்ளத்தை மூடவேண்டு இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments are closed.