Time: 1:39 PM

அதிராம்பட்டினத்தில் தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண உதவி

ஜூன்6: அதிராம்பட்டினத்தில் தீவிபத்தில் பாதித்த கும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.தஞ்சை அடுத்த அதிராம்பட்டினம் மீனவர் குடியிருப்பு பகுதியில் கடந்த மே 29ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 51 குடிசைகள் எரிந்து அனைத்து பொருட்கள்  நாசமானது. இதில் பாதிக்கப்பட்ட 51 குடும்பத்தினருக்கும் தஞ்சை மாவட்ட மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றமும் இணைந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசியும், ஒரு பட்டுப்புடவை என 51 குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வாசன் தலைமை வகித்து நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முத்துவேல், பட்டுக்கோட்டை மேற்கு வட்ட தலைவர் பாலை.கணேசமூர்த்தி, இளைஞரணி கணேசன், பட்டுக்கோட்டை மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் அதிராம்பட்டினம் மன்ற தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.