Time: 1:49 PM

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று மாலை தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டது. திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன், மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர்.

சுயட்சைகள் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நேற்று இரவு முடிவடைந்தது. இந்த நிலையில் ஆர்கே நகரில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று காலை தேர்தல் அதிகாரி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் . அதனை தொடர்ந்து முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே ஆர் கே நகரில் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

விதிகளை மீறும் வேட்பாளர்கள் ஓரிரு முறை எச்சரிக்கை செய்யப்படும் என்று தொடர்ந்து விதிகளை மீறுவோர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.அரசியல் காட்சிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க கூடாது எனவும், சாலைகளை மறைத்து பூத் அமைக்கும் அரசியல் கட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வரும் 12-ம் தேதி முதல் பூத் சிலிப் :

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வரும் 12-ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர் கே நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 15கம்பெனி துணை ராணுவம் வரும் 12ம் தேதி வரவுள்ளதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 9 புகார்கள் வந்துள்ளதாகவும், பண பட்டுவாடா தொடர்பாக 2 புகார்கள் வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.