Time: 7:46 AM

கலைஞர் பிறந்த நாள் விழாவையோட்டி பழஞ்சூர் செல்வம் வழங்கிய அன்னதானம்

அதிராம்பட்டினம், ஜூன் 04

திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 94 வது பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள அனைக்காடு டி.இ.எல்.சி. தொடக்கப்பள்ளியில் தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 64 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, வழங்கபட்டது. மற்றும் 200 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர செயலாளர்  இராம . குணசேகரன்  தஞ்சை தெற்க்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு  பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் , ஒன்றிய சிறுபான்மைஅமைப்பாளர் மரைக்காஇத்ரிஸ்அஹமது மாவட்ட பிரதிநிதி இன்பநாதன் தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி  துனை அமைப்பாளர்  கோடி நாகராஜ் ,  தி.மு.க நகர பொருப்பாளர் முத்துராமன் ,  நகர துனை செயலாளர் அன்சர்கான் , இனை செயலாளர் தில்லை நாதன் , ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி , நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.