Time: 9:32 PM

அதிராம்பட்டினத்தில வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என அமைச்சர் வாக்குறுதி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர்தெருவில் கடந்த 29ந் தேதி மதியம் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதனால் 2 கோடி மதிப்புள்ள வீடுகள் மற்றும் வலைகள், வீட்டு பொருட்கள் எரிந்து நாசமாயின

. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அமைச்சர் துரைக்கண்ணு. வைத்திலிங்கம் எம்.பி. பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர். பேராவூரணி எம்.எல்.ஏ.கோவிந்தராசு,மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை,பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் துரைக்கண்ணு அமைச்சர் ரு10 ஆயிரமும், தீயில் கருகியவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகங்கள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் காங்கிரட் வீடு கட்டி தரப்படும் என்றும், மீன்பிடி வலைகள் கிடைக்க ஏற்ப்பாடு செய்யப்படும் என்றும்,வாக்குறுதி அளித்தனர்.

இதில் அதிராம்பட்டினத்தில் தீ அணைக்கும் நிலையம் கொண்டுவரப்படும் என பொது மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்;. இவ்விழாவில் அதிமுக நிர்வாகிகள் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலை அய்யன்,பேருர் செயலாளர் பிச்சை மற்றும் ஏனைய நபர்கள் கலந்துக்கொண்டனர்.

 

Comments are closed.