Time: 5:47 PM

அதிரையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நேற்று (29ந்) தேதி தீ விபத்து நடந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்றன. இதில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சேகர் கலந்துக்கொண்டு வீடு முழுவதும் தீ பிடித்தவர்களுக்கு ரூ.5இ000- ம், பகுதி வீடு எரிந்தவர்களுக்கு ரூ.2இ500-ம் 10 கிலோ அரிசி ஒரு குடும்பங்களுக்கு 2 ஜோடி வேட்டி, சேலை, 1 ஜோடி போர்வையும் வழங்கினர். இந்நிகழ்சிசியில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகரச்செயலாளர் சுப.ராஜேந்திரன், செல்வநாகராஜன், பேரூர் செயலர் பிச்சை, கோட்டாட்சியர் கோவிந்தராசு தாசில்தார் ரவிச்சந்திரன், கலந்துக்கொண்டனர்.

 

Comments are closed.