Time: 7:51 PM

அதிராம்பட்டினத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தாமதமாக வரும் குடி நீர் – மின்வாரியத்தின் அலட்சியம் காரணமா?

அதிராம்பட்டினம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகம் பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் காளிஅம்மன் கோவில்எதிர்புறம் உள்ளது.இந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் சமீப காலங்களாக முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டுபொதுமக்களிடையே எழுந்துள்ளது.பொதுவாக  அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி மின் தடைஏற்படுவதோடு குறைந்த மின் அழுத்தமே உள்ளதால் மின் சாதன பொருட்கள் சரிவர இயங்குவதில்லை.

இது தவிர இரவுநேரங்களில் மின்வெளிச்சம் மிகக்குறைந்த அளவே உள்ளதால் பள்ளி மாணவர்கள் படிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது காற்றின் வேகத்தால் அல்லது பிற காரணங்களால் மின்ஒயர்கள் பொது இடங்களில் அறுந்து விழுந்தாலோ மின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் போனை எடுத்து தகவல்பெற யாரும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது பற்றி அலுவலகத்திற்கு நேரடியாக புகார் தெரிவிக்கச்சென்றால்அலுவலகத்தில் யாரும் இருப்பதில்லை.

இது பற்றி அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சேர்மன் மரைக்காகே.இத்ரிஸ் அஹமது என்பவர் கூறுகையில் சமீப காலங்களாக அதிராம்பட்டினம் மின் அலுவலக அதிகாரிகள் சரிவரசெயல்படவில்லை. மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது மின் ஒயர்கள் மக்கள் வசிக்கும் இடங்களில் அறுந்துவிழுந்தாலோ உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை மின்சாரம் குறைந்தளவே வருவதால் கூலி வேலைக்கு போய்ட்டுவரும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் குடி தண்ணீ பிடிப்பதற்க்கு காத்திற்க்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுவுள்ளது இதற்குகாரணம் மின்சாரம் குறைவாக வருவதால் பேருராட்சியில் குடி நீரை சேகரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுமட்டும்இல்லாமல் சில பகுதியில் போஸ்ட் கம்பங்கள் மிக பழுதாயி எலுப்பு கூடாக உள்ளது இதனால் உயிரிழப்பு ஏற்படும்அபாயம் உள்ளது. எனவே மின் அலுவலகப்பணிகள் முறையாக இயங்க   உயரதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்றார்.

Comments are closed.