Time: 2:29 PM

அதிராம்பட்டினத்தில் இறந்த விவசாயி – ன் கண்கள் தானம்

அதிராம்பட்டினம் . ஆக. 2:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிட்டுத்தேவர் வயது 64 விவசாயி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் மனைவி லலிதாவுடன் வசித்துவந்தார். இந்நிலையில் இவர் திடீரென இன்று காலை இறந்தார்.இதையடுத்து கிட்டு விருப்பப்படி இவரின் குடும்பத்தார்கள் இவருடைய கண்களை தானமாக கொடுக்க முன் வந்தனர். இதையடுத்து தகவலறிந்த அதிராம்பட்டினம் லயன்ஸ் க்ளப் தலைவர் முகமது மொய்தீன், செயலாளர் சூப்பர் அப்துல்ரஹ்மான் மற்றும் லயன்ஸ் சங்க இயக்குனர் சாராஅகமது ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மாரிமுத்து கண்களை எடுத்து கும்பகோனம் ஐ கேம்ப்பிற்கு அனுப்பிவைத்தனர்.

 

 

பட விளக்கம்

அதிராம்பட்டினம் அருகில் உள்ள தம்பிக்கோட்டை வடகாடுகிராமத்தில் இறந்த விவசாயிடமிருந்து பெறப்பட்ட கண்களுடன் லயன்ஸ் க்ளப் தலைவர் முகம்மது மொய்தீன்,செயலாளர் சூப்பர் அப்துல்ரஹ்மான் மற்றும் விவசாயி‡ன் உறவினர்கள்

Comments are closed.