Time: 9:22 PM

அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

அதிராம்பட்டினம்ஜூலை 21

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2017-2018ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ். முகம்மது ரஃபி புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், லயன்ஸ் சங்கம் அதிராம்பட்டினம் தலைவராக எஸ்.எம். முகம்மது முகைதீன், செயலராக அப்துல் ரஹ்மான், பொருளாளராக எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் பொறுப்பேற்றனர். லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.டி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில், ரூ. 15 ஆயிரம் மதிப்பில், மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர சைக்கிள், புற்றுநோயால் பாதிப்படைந்த சிறுவனுக்கு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் எஸ்.டி.எஸ் செல்வம், மாவட்ட அமைச்சரவை நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், வட்டாரத் தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். பணியேற்பு விழாவிற்கு லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்து வரவேற்றார். லயன்ஸ் சங்கச் செயலர் முத்துகிருஷ்ணன் கடந்த ஆண்டில் லயன்ஸ் சங்கம் ஆற்றிய சேவைத் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினார். முடிவில் செயலர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

 

Comments are closed.